Welcome to DFW Hindu Temple Vidya Vikas – Tamil
-
தமிழைப் போற்றுவோம் — தமிழால் இணைவோம்
வித்யா விகாஸ் தமிழ் பள்ளி சுய ஊக்கமும் தொலை நோக்கமும் கொண்ட டல்லாஸ் வாழ் தமிழர்களால் ஆரம்பிக்கப்பட்டது.
அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் குழந்தைகள் தங்களின் குடும்பம் மற்றும் உறவினர்களிடன் நல்ல தமிழ் உச்சரிப்புடன் பேசவும் தமிழில் எழுதவும், படிக்கவும் சொல்லித் தருவதே இப்பள்ளியின் நோக்கம். இங்கு அமெரிக்கன் தமிழ் அகாடெமியின் (ATA) பாட திட்டத்தில் வகுப்புகள் நடைபெறுகின்றன. இதில் ஐந்து வயது முதல் குழந்தைகள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
First day of School: Aug 19, 2018
Last day for Tamil Registration: Oct 31, 2018
Class Timing : Sunday 9AM – 11AM
-
நோக்கம்
அமெரிக்காவில் வாழும் தமிழ் குழந்தைகளுக்கு தமிழில் பேச, எழுத, வாசிக்கக் கற்றுக் கொடுத்து, தமிழ்மொழியினை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதே எங்களின் சீரிய நோக்கமாகும் .
பார்வை
குழந்தைகளின் தமிழ் கற்கும் ஆர்வத்தை மேன்மேலும் ஊக்கப்படுத்தி, அவர்களின் ஆற்றலையும், தனித்தன்மையினையும் வெளிக்கொணரச் செய்து, அவர்களைச் சமூக நிகழ்ச்சிகளில் முழு ஈடுபாடுடன் பங்கேற்கச் செய்ய உறுதுணையாக இருப்போம்.
Executive Team
- Principal: Jayashree Prabu
- Vice Principal: Lavanya Sarma
- ATA Co-ordinator: Ganesh Prabu
- Assistant Co-ordinator: Ananthi Rameshbabu
- Secretary: Karthik Chenpagapandian
- Volunteer Co-ordinator: Jeevanantham Veerappan
- Noolagam Volunteers : Sekar, Mani and Sathya Narayanan
- School Activities Co-ordinator: Radha Balaji and Sathya Jeevanandham
-
Class Info
வித்யா விகாஸ் தமிழ் பள்ளி சுய ஊக்கமும் தொலை நோக்கமும் கொண்ட டல்லாஸ் வாழ் தமிழர்களால் ஆரம்பிக்கப்பட்டது.
அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் குழந்தைகள் தங்களின் குடும்பம் மற்றும் உறவினர்களிடன் நல்ல தமிழ் உச்சரிப்புடன் பேசவும் தமிழில் எழுதவும், படிக்கவும் சொல்லித் தருவதே இப்பள்ளியின் நோக்கம். இங்கு அமேரிக்கன் தமிழ் அகாடெமியின் (ATA) பாட திட்டத்தில் வகுப்புகள் நடைபெறுகின்றன. இதில் நான்கு வயது முதல் குழந்தைகள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
-
Level – மழலை – 0
Mrs. Preethi Sundaram
வயது வரம்பு:
ஐந்து முதல் ஆறு வயது வரைதகுதி:
அடிப்படை தகுதி எதுவும் தேவையில்லை.நோக்கம்:
இந்த நிலையில் பயிலும் மாணவர்கள் உயிர் எழுத்துகள், சில பாடல்கள் மற்றும் கதைகளுடன் சுமார் ஐம்பது எளிய சொற்களைக் கற்றறிதல்.மொழித்திறன்:
உயிர் எழுத்துகள் மற்றும் ஆயுத எழுத்தை அறிதல்.
ஒன்று முதல் பத்து வரை கூறுதல்.
காய்கள், பழங்கள், தாவரங்கள் பெயர்களை அறிதல்.
விலங்குகள், கடல் வாழ் உயிரினங்கள், பூச்சிகள் மற்றும் உடல் உறுப்புகள் பெயர்களை அறிதல்.
நிறங்கள், சுவைகள், திசைகள், பருவ காலங்கள் மற்றும் வடிவங்கள் பெயர்களை அறிதல்.
எளிய முறையில் எழுத மற்றும் படங்கள் வரைய பயிற்சி.
குழுக்களாக சேர்ந்து பாடுதல், உரையாடுதல் மற்றும் பொது அறிவுக் கதைகள் பகிர்தல்.
வாக்கியங்களைத் தெளிவாக உச்சரித்தல். -
Level – நிலை – 1
Mrs.Jayashree Prabu / Mrs. Rohini
வயது வரம்பு:
குறைந்த பட்சம் 6 வயது.தகுதி:
அடிப்படை தகுதி எதுவும் தேவையில்லைநோக்கம்:
இந்த நிலையின் முடிவில் உயிர், மெய் எழுத்துக்களுடன், சில கதைகள், பாடல்கள் மற்றும் சுமார் நூறு எளிய தமிழ்ச் சொற்களைக் கற்றறிதல்.மொழித்திறன்:
உயிர் மற்றும் மெய் எழுத்துக்களை அறிதல், எழுதுதல், அடையாளம் காணல்.
பழங்கள், செல்லப் பிராணிகள், காய்கறிகள், காட்டு விலங்குகள், பறவைகள், வாகனங்கள், பண்ணை விலங்குகள், நிறங்கள், வார நாட்கள், எண்கள், சுவைகள், பூக்கள் பெயர்களை சொல்லிப் பழகுதல்.
பாடல்கள், கதைகள், ஆத்திசூடி, படங்களைப் பார்த்து அதன் பெயர்களைக் கூறல்.
எளிய சொற்கள், வாக்கியங்களை உச்சரிக்கப் பயிற்சி.
எளிய முறை எழுத்துப் பயிற்சி. -
Level – நிலை – 2
Mrs. Radha Balaji
வயது வரம்பு:
குறைந்த பட்சம் 7 வயது.தகுதி:
அ த க நிலை 1 முடித்திருக்க வேண்டும் அல்லது ஏற்கனவே உயிர், மெய் எழுத்துக்கள் படிக்க, எழுத தெரிந்திருக்க வேண்டும்.நோக்கம்:
தமிழ் எழுத்துக்களில் எ வரிசை உயிர்மெய் எழுத்துகள் வரை பயிற்றுவித்தல்.
பெயர்ச்சொற்கள் மட்டுமன்றி, வினைச்சொற்களையும், அவற்றின் மூலம் உருவான எளிதான சொற்றொடர்களையும் பயிலுதல்.
ஒவ்வொரு பாடத்திலும் திருக்குறள், ஆத்திசூடி, கதைகள், பழமொழிகள் மற்றும் பாடல்கள் கற்றறிதல்.மொழித்திறன்:
தமிழ் எழுத்துகள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, முதல் பகுதியானது நிலை இரண்டிலும், இரண்டாம் பகுதியின் எழுத்துகள் நிலை மூன்றிலும் பயிற்றுவித்தல்.
ட, ப, ம, ய என எழுதுவதற்கு எளிதான எழுத்துகளில் ஆரம்பித்து படிப்படியாக மற்ற எழுத்துகளும் இந்த நிலையில் பயிலுதல்.
உயிரெழுத்துகளைத் தவிர, அ & ஆ வரிசை உயிர்மெய் எழுத்துகள், இ & ஈ வரிசை உயிர்மெய் எழுத்துகள், உ & ஊ வரிசை உயிர்மெய் எழுத்துகள் மற்றும் எ வரிசை உயிர்மெய் எழுத்துகளை அறிதல், எழுதுதல்.
ஒவ்வொரு பாடத்திலும் இந்த எழுத்துகளால் ஆன எளிய பெயர்ச்சொற்கள் படங்களுடனும், வினைச்சொற்களும், அவற்றால் உருவான சிறு சிறு சொற்றொடர்களும் பயிலுதல்.
குறைந்தபட்சம் இருநூற்று ஐம்பது சொற்களையாவது அறிதல், ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தல். -
Level – நிலை – 3
Mrs. Subha Sekhar /Mrs.Sangamithra Krishnan
வயது வரம்பு:
குறைந்த பட்சம் 8 வயது.தகுதி:
அ த க நிலை 3 முடித்திருக்க வேண்டும் அல்லது ஏற்கனவே எழுத்துக்கள் சொற்கள், சிறுவாக்கியங்கள் படிக்க எழுத தெரிந்திருக்க வேண்டும்.நோக்கம்:
மொழித்திறன்:
சிறு வாக்கியங்களைப் படித்து புரிந்து கொள்ளுதல், எழுதுதல்.
சிறுகதைகளை உள்வாங்கி கருத்தை கிரகித்தல்.
சொற்களைத் தெளிவாக உச்சரித்தல், கலந்துரையாட கற்றல். மொழியின் தொன்மை, கலாசாரம் இலக்கியத்தின் அறிமுகம்.
சொல் கருத்து பிழையின்றி மொழி மாற்றம் செய்தல்.இலக்கணம்:
பெயர்ச்சொற்கள், சுட்டுப்பெயர் பல்வேறு வினைச்சொற்கள் காலநிலைகளை அறிதல்.
அடிப்படை இலக்கணங்களைப் பயன்படுத்தி வாக்கியங்களை அமைத்தல். வினைச்சொற்களை பயன்படுத்துதல்.
கால சூழ்நிலையைப் பொருத்து வாக்கியங்களை மாற்றியமைத்தல். எட்டு வகையான வேற்றுமை உருபுகளை அறிதல். -
Level – நிலை – 4
Mrs. Sathya Jeevanantham/Mrs. Manjula Santhanam
வயது வரம்பு:
குறைந்த பட்சம் 9 வயது.தகுதி:
அ த க நிலை 3 முடித்திருக்க வேண்டும் அல்லது ஏற்கனவே எழுத்துக்கள் சொற்கள், சிறுவாக்கியங்கள் படிக்க எழுத தெரிந்திருக்க வேண்டும்.நோக்கம்:
மொழித்திறன்:
சிறு வாக்கியங்களைப் படித்து புரிந்து கொள்ளுதல், எழுதுதல்.
சிறுகதைகளை உள்வாங்கி கருத்தை கிரகித்தல்.
சொற்களைத் தெளிவாக உச்சரித்தல், கலந்துரையாட கற்றல். மொழியின் தொன்மை, கலாசாரம் இலக்கியத்தின் அறிமுகம்.
சொல் கருத்து பிழையின்றி மொழி மாற்றம் செய்தல்.இலக்கணம்:
பெயர்ச்சொற்கள், சுட்டுப்பெயர் பல்வேறு வினைச்சொற்கள் காலநிலைகளை அறிதல்.
அடிப்படை இலக்கணங்களைப் பயன்படுத்தி வாக்கியங்களை அமைத்தல். வினைச்சொற்களை பயன்படுத்துதல்.
கால சூழ்நிலையைப் பொருத்து வாக்கியங்களை மாற்றியமைத்தல். எட்டு வகையான வேற்றுமை உருபுகளை அறிதல். -
Level – நிலை – 5
Mrs. Lavanya Sarma
வயது வரம்பு:
குறைந்த பட்சம் 10 வயது.தகுதி:
அ த க நிலை 4 முடித்திருக்க வேண்டும் அல்லது ஏற்கனவே வாக்கியங்கள் படித்து புரிந்து கொள்ளுதல்; வாக்கியங்கள் எழுதுதல், இலக்கண அறிவு (ஒருமை, பன்மை, வினைச்சொல், பெயர்ச்சொல், சுட்டுப்பெயர், கால நிலைகள், வினை வகைகள், மற்றும் எட்டு வகையான வேற்றுமை உருபுகள் அறிதல்) போன்ற திறன்கள் பெற்றிருத்தல்.நோக்கம்:
உரைநடை வாசித்தல், புரிந்து கொள்ளுதல்.
அடிப்படை தமிழிலக்கணத்தின் புரிதல்.
ஆங்கிலத்திலிருந்து தமிழுலும், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழி மாற்றம் செய்தல்.மொழித்திறன்:
வாக்கியங்களைத் தெளிந்த உச்சரிப்போடு பிழையின்றி படித்தல், புரிந்து கொள்ளுதல், எழுதுதல்.
மொழி மாற்றம் செய்தல்; பண்பாடு மற்றும் இலக்கியம் சார்ந்த பாடங்கள் படித்து தெளிவுபட கருத்துக்களை வெளிப்படுத்தல்.
வாக்கியங்கள், கருத்துக்கள், வார்த்தைகள் மற்றும் இலக்கணத்தை ஆங்கில மொழியோடு ஒப்பிட்டுப் பயிலுதல்.
திருக்குறளின் தொன்மை அறிந்து, தெளிவுபடப் படித்து விளக்கம் சொல்லுதல்.இலக்கணம்:
பின் வரும் இலக்கணத்தைப் பாட மற்றும் பயிற்சி நூல்களின் வாயிலாக பயிலுதல்.
வினைப்பாகுபாடுகள் (verb classes)
பெயரடை (adjective)
வினையடை (adverb)
எதிர்மறை வினையச்சம் (negative infinitives)
நிபந்தனைச் சொற்கள் (conditional words)
இயல்பு/விகாரப் புணர்ச்சி (compound words)
ஒப்பீட்டு அடைகள் (positive/comparative/superlative degrees)
தொடர்வினைகள் (continuous tense)
வினாச் சொற்கள் (interrogative words)
எழுவாய்/பயனிலை/செயப்பாடு பொருள் (subject/object/predicate)
தனி மற்றும் கூட்டு வாக்கியங்கள் (simple and compound sentences)
கலப்பு மற்றும் கதம்ப வாக்கியங்கள் (complex and complex-compound sentences)
வினா வாக்கியங்கள் (interrogative sentences)
செய்வினை, செயப்பாட்டு வினை (active/passive voices)
இணைப்புச் சொற்கள் (conjunction words) -
Level – நிலை – 6
Mrs. Sangeetha Kumaran
வயது வரம்பு:
குறைந்த பட்சம் 11 வயது.தகுதி:
அ த க நிலை 5 முடித்திருக்க வேண்டும் அல்லது ஏற்கனவே வாக்கியங்கள் படித்து புரிந்து கொள்ளுதல்; சுயமாக எளிய வாக்கியங்களை எழுதுதல், இலக்கண அறிவு (ஒருமை, பன்மை, வினைச்சொல், பெயர்ச்சொல், சுட்டுப்பெயர், கால நிலைகள், வினை வகைகள், மற்றும் எட்டு வகையான வேற்றுமை உருபுகள் அறிதல்) போன்ற திறன்கள் பெற்றிருத்தல். மேலும் தமிழில் அடிப்படை உரையாடல் திறன் பெற்றிருக்க வேண்டும்.நோக்கம்:
மொழித்திறன்:
வாக்கியங்களைத் தெளிந்த உச்சரிப்போடு பிழையின்றி படித்தல், புரிந்து கொள்ளுதல், எழுதுதல்.
மொழி மாற்றம் செய்தல்; பண்பாடு மற்றும் இலக்கியம் சார்ந்த பாடங்கள் படித்து தெளிவுபட கருத்துக்களை வெளிப்படுத்தல்.
வாக்கியங்கள், கருத்துக்கள், வார்த்தைகள் மற்றும் இலக்கணத்தை ஆங்கில மொழியோடு ஒப்பிட்டுப் பயிலுதல்.
பேச்சுத் தமிழில் அமைந்திருக்கும் உரையாடல் பாடங்களை பயின்று பொருளறிதல்.
எளிமையான கட்டுரை, கடிதம் எழுதுதல்.
கதையைப் படித்து புரிந்துக் கொண்டு விடுபட்ட பகுதியை நிறைவு செய்தல்.இலக்கணம்:
பின் வரும் இலக்கணத்தைப் பாட மற்றும் பயிற்சி நூல்களின் வாயிலாக பயிலுதல்.
வினைப்பாகுபாடுகள் (verb classes)
வேற்றுமையுருபுகள் (declension)
வினைத்தொகை / பண்புத்தொகை (implied verbs / nouns)
உவமை / உருவகம் (simile / metaphor)
சொல்லுருபு (post position)
தொடர்வினைகள்(continuous progressive tense)
துணைவினைகள் (auxiliary verbs)
நேர்க்கூற்று, நேரல்கூற்று (direct indirect speech)
பகுபதம், பகாப்பதம்(derivative / primitivewords)
மரபுத்தொடர் / வழக்குத்தொடர் (slangs / idioms)
இயல்பு/விகாரப் புணர்ச்சி (combination / compounding)உரையாடல்:
மாணவர்களுக்கு அளிக்கப்படும் ஒலிக்கோப்பினைக் கேட்டு அதில் கேட்கப்பட்டிருக்கும்
கேள்விகளுக்கு மாணவர்கள் ஒலி வடிவில் தங்கள் விடையை பதிவு செய்து ஒலிக்கோப்பாக அனுப்பி வைத்தல்.
- Please click here to view the Parents-Teacher Handbook
- Calendar
- Newsletter
- Picture Gallery
- Contact Info
Please contact us at vvikastamil@gmail.com
Visit us on Facebook